Nagaratharonline.com
 
நெற்குப்பை உட்பட, செட்டிநாடு சுற்றுலா தலங்களை மேம்படுத்த திட்டம்  Sep 5, 12
 
செட்டிநாடு சுற்றுலா தலத்தை மேம்படுத்த, ரூ.11 கோடியில், "ஊரக சுற்றுலா (கிளஸ்டர்) தொகுப்பு' திட்டம் தயாரிக்கும் பணி, நடந்து வருகிறது.

சிவகங்கை செட்டிநாடு சுற்றுலா தலம், கானாடுகாத்தான் பங்களா, ஆயிரம் ஜன்னல் வீடு, கோட்டையூர் பங்களா, அரியக்குடி, ஆத்தங்குடி, நேமம், இளையாத்தங்குடி உட்பட 9 நகரத்தார் கோவில்கள், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

செட்டிநாடு கலாச்சாரங்களை வெளிநாட்டினரும் அறியும் வகையில், சுற்றுலா தலங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட ரூ.11 கோடியில் திட்டம் தயாரிக்க, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டப்படி,காரைக்குடி,கானாடுகாத்தான், நெற்குப்பை, வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி, மாத்தூர் உட்பட சுற்றுலா தலங்களை "தொகுப்பாக' இணைக்கும் வகையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஏற்படுத்தப்பட உள்ளது.