Nagaratharonline.com
 
காரைக்குடியில் படப்பிடிப்பு  Sep 3, 12
 
காரைக்குடியில் நம்பர் ஒன் புரொடக்ஷன் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம், பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்துக்கு வெள்ளிக்கிழமை பூஜை நடத்தி, படப்பிடிப்பைத் துவங்கியது.

இதற்கான விழா, சங்கந்திடல் பொய் சொல்லா மெய்ய ஐயனார் கோயிலில் நடை பெற்றது.
பின்னர், படத்தின் இயக்குநர் காளி கூறியது:
இப்புதிய படத்துக்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. மதி கெட்டான் சாலை என்ற படத்தின் கதாநாயகனாக நடித்த ஆதர்ஷ் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் அனு நடிக்கிறார். மேலும், காதல் படத்தில் நடித்த சுகுமார், அல்வா வாசு உள்பட பலரும் நடிக்கின்றனர்.

காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறும். பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்படும். பாவப்பட்ட மக்கள் வாழ்க்கையை யதார்த்த மாகக் கூறுவதே இப்படத்தின் கதை. இதில், காதல் காட்சிகளும், காமெடியும் நிறைந்திருக்கிறது என்றார்.