Nagaratharonline.com
 
தேவகோட்டை ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் விற்பனை தொடக்கம்  Sep 3, 12
 
தேவகோட்டை ரஸ்தா ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜி.ராஜாராம் தெரிவித்ததாவது:

தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தட்கல் டிக்கெட் பெற காரைக்குடி ரயில் நிலையம் செல்ல வேண்டியிருந்தது. எனவே தேவகோட்டை ரஸ்தா ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் பெறும் வசதி தொடங்க வேண்டும் என மதுரையில் கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நான் வலியுறுத்தினேன்.
மேலும் இக் கோரிக்கை குறித்து மனுவாகவும் கோட்ட மேலாளரிடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து தேவகோட்டை ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் விற்பனையைத் தொடங்க கோட்ட மேலாளர் ஆணை பிறப்பித்தார். தற்போது இந்த ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.