Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சியில் முப்பெரும் விழா  Aug 21, 12
 
பூலாங்குறிச்சியில் சோலார்விளக்கு அர்ப்பணிப்பு, இலவச வேஷ்டி, சேலை வழங்கல் இலவச திருமண மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா என முப்பெரும்விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூர் ஒன்றியம் பூலாங்குறிச்சியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் 110 சோலார் விளக்குகள், ரூ. 50 லட்சம் மதிப்பில் இலவச திருமண மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா, ஆயிரம் நபர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா முதலியன வள்ளல் சிவலிங்கம் செட்டியாரின் 100- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் புதல்வர் அபிராமிராமநாதன் மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுலஇந்திரா தலைமை வகித்து சோலார் விளக்குகளை இயக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேபி மீனாட்சி கடவுள் வாழ்த்துப் பாட நிகழ்ச்சி தொடங்கியது.
விழாவில் ஆட்சியர் வே.ராஜாராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.பன்னீர்செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வள்ளல் சிவலிங்கம் செட்டியார் மீனாட்சிஆச்சியின் திருவுருவ சிலையினை அமைச்சர் கோகுலஇந்திரா திறந்து வைத்தார்.
திரைப்பட நடிகர்கள் நிழல்கள்ரவி, சுப்பு மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.எம்.ராஜா வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியினை மீனாட்சி பெரியகருப்பன் தொகுத்து வழங்கினார். நிறைவாக அபிராமிராமநாதன் ஏற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பூலாங்குறிச்சிப் பொதுமக்கள் ஆகியோர் திரளான அளவில் கலந்து கொண்டனர்.