Nagaratharonline.com
 
திருப்பதியில் தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருப்பு  Aug 19, 12
 
திருமலை-திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்தனர்.
திருமலையில் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை சற்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்தனர். வைகுண்டம் 1-ல் உள்ள 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி வெளியே 3 கி.மீ. தொலைவுவரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரமும், விரைவு தரிசனத்துக்கு (ரூ.300) 13 மணி நேரமும் திவ்ய தரிசனத்துக்கு (மலைப்பாதையில் நடந்துவருபவர்கள்) 10 மணி நேரமும் ஆனது.

பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் திருமலை - திருப்பதி தேவஸ்தானம் லகு தரிசனத்தை ரத்து செய்துவிட்டு மஹா லகு (நீண்டதூர) தரிசனத்தைப் பின்பற்றியது. இது திங்கள்கிழமையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறை நீடிக்கிறது. எனவே, தேவஸ்தான தங்குமிடங்களில் தண்ணீர் அழுத்தக்குறைவால் தண்ணீர் அனுப்ப முடியாத குடில்களை வாடகைக்குத் தராமல் பூட்டி வைத்துள்ளனர்.