Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி  Aug 17, 12
 
பொன்னமராவதி பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.


பேரூராட்சித் தலைவர் ஆர்.எம். ராஜா தலைமை வகித்தார்.
செயல் அலுவலர் வ. சுலைமான்சேட் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், பொன்னமராவதி பேருந்து நிலையம் முதல் காந்தி சிலை வரை மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது.