Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சிப் பயிற்சி  Jul 29, 12
 
கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை விண்வெளி ஆராய்ச்சிப் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமிற்கு பள்ளித் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். செயலர் குணாளன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அப்துல்கலாம் தலைமையில் பணியாற்றிய டாக்டர் ஆர்.எம்.முத்தையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விண்வெளி ஆராய்ச்சி பற்றி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வெண்திரை மூலம் விளக்கப் பயிற்சி அளித்தார். முதல் விண்வெளிக்கலம் அமைக்கப்பட்ட ஆண்டு மற்றும் விண்வெளிக்கலத்தின் பயன்கள் குறித்த முக்கிய தகவல்கள் மற்றும் விண்வெளிக் கலத்தின் ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சி குறித்து இப்பயிற்சியில் விளக்கம் அளித்தார்.