Nagaratharonline.com
 
வைரவன்பட்டியில் தேரோட்டம்  Jul 23, 12
 
திருப்பத்தூர், ஜூலை 22: திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் வைரவருக்கு மகா உற்சவத்தை முன்னிட்டு ஆடித் தேரோட்டம் (படம்) நடைபெற்றது.
மகா உற்சவம் ஜூலை 14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் சாமி புறப்பாடும் இரவில் வைரவர் சிம்மம், காமதேனு, அம்மன், கைலாச, கோரதம், வெள்ளி ரிஷப, யானை, வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
9-ம் நாளான ஞாயிறுக்கிழமை வைரவசாமி காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

Source:Dinamani