Nagaratharonline.com
 
வயிரவன்பட்டி கோயில் விழா துவக்கம்  Jul 17, 12
 
திருப்புத்தூர் என்.வயிரவன்பட்டி வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர், வயிரவர் திருக்கோயிலில் உற்சவம் துவங்கியது.
கடந்த 14ம் தேதியன்று காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின
.தொடர்ந்து மாலையில் காப்புக்கட்டி 11 நாள் உற்சவம் துவங்கியது. இரவில் சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.
ஜூலை 22ம் தேதியன்று 9 ம் திருநாளை முன்னிட்டு தேரோட்டம்நடைபெறும். காலை 8 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளலும்,மாலை 5 மணிக்கு வடம் பிடித்தலும் நடைபெறும். மறுநாள் காலையில் அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் மற்றும் இரவில் பூப்பல்லக்கில் வீதி உலா நடைபெறும். 11ம் திருநாளன்று காலையில் தீர்த்தவாரியும், திருக்கல்யாணமும் நடைபெறும்.