Nagaratharonline.com
 
தீபாவளி முன்பதிவு: 10 நிமிடங்களில் விற்றன டிக்கெட்டுகள்  Jul 13, 12
 
தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்தன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 13-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. கடந்த ஆண்டு 90 நாள்களுக்கு முன் தொடங்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு, இந்த ஆண்டு 120 நாள்களுக்கு முன்னதாகத் தொடங்கியது. இதன்படி தீபாவளிக்கு 4 நாள்களுக்கு (நவம்பர் 9) முன்னதாக ஊருக்கு செல்வோர் வியாழக்கிழமை டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
வழக்கம் போல் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.