Nagaratharonline.com
 
சிராவயல் நகரத்தார் சார்பில் திருவாசக விழா  Jul 12, 12
 
காரைக்குடி, ஜூலை 11: காரைக்குடி அருகே சிராவயல் நகரச்சிவன் கோவிலில் 96 ஊர் நகரத்தார் பாதயாத் திரைக்குழு, காரைக்குடி திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றம் மற்றும் சிராவயல் நகரத்தார் சார்பில் திருவாசக விழா நடைபெற்றது.

விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்தார். பாதயாத்திரைக் குழுவைச் சேர்ந்த சுப்பிமணியன், மெய்யப்பன் ஆகியோர் வரவேற்றனர். திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. திருவாசகம் முற்றோதல் கருத்தரங்கில் ஈப்போ நாராயணன், சொக்கலிங்கம், மாணிக்கம் ஆகியோர் பேசினர். காசிஸ்ரீ சேது நன்றி கூறினார். உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவாசகம் குறித்து கவிஞர் அரு. சோமசுந்தரன் கூறியது:

திருவாசகம் எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அது இன்றும் பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய்த் திகழ்கிறது. இதன் பொருள் என்ன என்று மாணிக்கவாசகரிடம் அக்காலத் தில் கேட்டபோது அவர் தில்லை நடராஜப்பெருமானைச் சுட்டிக்காட்டி இதுதான் திருவாசகத்தின் பொருள் என்றார்.

எனவே நாம் இன்றும் திருவாசகத்தை உணர்ந்து படித்தால் நடராஜப் பெருமான் நம் மனத் திரையில் தோன்றுவார் என்றார்.