Nagaratharonline.com
 
10 ஆயிரம் ரூபாயில் கையடக்க கணினி : BSNL. அறிமுகம்  Jul 10, 12
 
கையடக்க கணினி விற்பனையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சென்னையில் துவக்கியுள்ளது.

நவீன கையடக்க கணினிகள் குறித்து பொது மேலாளர்கள் கூறியதாவது: இரு மாதிரி, 'லேப்லெட்' கணினிகளும், மொபைல் போனை விட சற்று பெரிதாக, கையடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். 'லேப்-டாப்'பில் இடம் பெற்றிருக்கும் அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. இரு மாதிரிகளில், ஐ.எஸ்.70 ஐ.ஆர்.,ல், ஆண்ட்ராய்ட் 2.3 ஆபரேட்டிங் சிஸ்டம், 256 எம்.பி., ராம், ஒய்-பை, 3டி கேம்ஸ் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை 3,495 ரூபாய். ஐ.எஸ்.703 சி., யில், ஆண்ட்ராய்ட் 4.1 ஆபரேட்டிங் சிஸ்டம், 1 ஜி.பி., ராம், கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன; இதன் விலை 6,499 ரூபாய். கையடக்க கணினியில், இணைய வசதியைப் பெற குறைந்த கட்டணத்தில், '2ஜி, 3ஜி' திட்டங்களை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. . அனைத்து பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களில், இந்த இரு மாதிரி கணினிகள் கிடைக்கும். மேலும், இரண்டு வாரத்திற்குள் பேசும் வசதியுடன் கூடிய கையடக்க கணினி, 10 ஆயிரம் ரூபாயில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.