Nagaratharonline.com
 
தேவகோட்டையில் பல ஆண்டுகளாக தூர்வாராத ஊரணிகளால் சுகாதாரக்கேடு  Jul 9, 12
 
தேவகோட்டை நகராட்சி எல்கைக்குள் உள்ள ஊரணிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
இங்கு, கோவில், நகராட்சி, தனியாருக்கு சொந்தமாக 14 ஊரணிகள் வரை உள்ளன. இந்த ஊரணிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, மழை நீர் சேகரமாகமுடியாத நிலை உள்ளது. தற்போது, இந்த ஊரணிகளில் பிளாஸ்டிக் கழிவு, செடிகொடிகளால் புதர் மண்டியும், மழை நீரில் சாக்கடை கழிவு நீர் கலக்கிறது.

இதனால், ஊரணிகளில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகள் மூலம் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

நகரத்தார் நிதி உதவியில் கருதாவூரணியை தூர்வாரி, சுற்றி வேலி அமைத்தனர். காலப்போக்கில் அவற்றை நகராட்சி பராமரிக்காமல் விட்டுவிட்டது.

வெள்ளையன், வள்ளியப்ப செட்டியார், அருணாசல பொய்கை, தின்னப்ப செட்டியார், அம்மச்சி ஊரணிகளில் கழிவுகள் நிறைந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ஊரணிகளுக்கு அருகிலேயே நகராட்சி குப்பை தொட்டிகளை வைத்துள்ளதால், குப்பை தொட்டியில் சேகரமாகும் "பிளாஸ்டிக்' கழிவுகள் ஊரணிக்குள் விழுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, நகரில் நிலத்தடி நீர்மட்டத்தை காக்கவும், ஊரணிகளில் சுகாதாரம் கடைபிடிக்க 14 ஊரணிகளையும் தூர்வாரி சுத்தம் செய்யவேண்டும்.


source : Dinamalar