Nagaratharonline.com
 
காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா  Jul 5, 12
 
தேவகோட்டை நகர சிவன் கோவிலில் காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா பொற்கிழி கவிஞர் அரு.சோமசுந்தரன் தலைமையில் நடைபெற்றது.

அரு.சோமசுந்தரன் பேசியதாவது, மாங்கனியை நினைத்தால் காரைக்கால் அம்மையாரின் நினைவு வரும். அவரது இயற்பெயர் புனிதவதி. மாம்பழத்தால் அவர் அடைந்தது பெரும் அவதிதான். கையேயின் வரத்தால் இராமபிரான் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. மாங்கனியின் வருகையால் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

இராமன் காட்டுக்கு போனான். காரைக்கால் அம்மையார் கயிலைக்கு போனார். சிவபெருமானால் அம்மையே என அமைக்கப்பட்டவர். பிறவாமையும் பிறந்தால் உன் மறவாமையும் வேண்டும் என்றார். உன் அடியின்கீழ் இருந்து நீ ஆட நான் பாடவேண்டும் என்றார் அரு.சோமசுந்தரன் பேசினார். முன்னதாக செந்தில்நாதன் இறைவணக்கம் பாடினார். இராமநாதன் வரவேற்றார். சிந்தாமணி செட்டியார் நன்றி கூறினார்.

source : dINAMANI