Nagaratharonline.com
 
செட்டிநாடு' பலகாரத்திற்கு "பிராண்ட் நேம்'  Jun 20, 12
 
சிவகங்கை:""மாவட்டத்தில் பெயர் பெற்ற "செட்டிநாடு' பலகார வகைகளை தயார் செய்து, நாடு முழுவதும் விற்கும் வகையில்,"பிராண்ட் நேம்' ஏற்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர் ராஜாராமன் பேசினார்.
சிவகங்கையில், மகளிர் திட்டம் சார்பில் இளைஞர்களுக்கு 3 மாத தொழில்திறன் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடித்த 210 பேருக்கு ரூ.12.38 லட்சம் ஊக்கத்தொகையுடன் கூடிய சான்றிதழை கலெக்டர் வழங்கி பேசியதாவது:

உணவு தயாரிப்பு பயிற்சி பெற்றவர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தை நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.உணவு தயாரிப்பு நிறுவனங்களும் இச்சட்டத்தை கடைபிடித்து உணவுகளை தயாரித்து விற்க வேண்டும். இம்மாவட்டத்தில் "செட்டிநாடு' பலகாரம் பிரசித்தி பெற்றவை. இது போன்ற உணவுகளை தயாரித்து, நாடு முழுவதும் விற்பனை செய்யும் வகையில், பயிற்சி பெற்றவர்கள் வங்கி கடன்களை பெற்று "செட்டிநாடு' பலகாரங்களை தயாரிக்க @வண்டும். இதன் மூலம், சிவகங்கை மாவட்டத்திற்கு செட்டிநாடு உணவு "பிராண்ட் நேமை' உருவாக்க வேண்டும், என்றார்.

source : Dinamalar