Nagaratharonline.com
 
மின்பொறியாளர் இல்லாத மதகுபட்டி மின் அலுவலகம்  Jun 19, 12
 
கருத்தை பதிவு செய்ய
பாகனேரி: மதகுபட்டி மின் வாரியத்தில் மதகுபட்டி,அழகமாநகரி, ஏரியூர்,அலவாக்கோட்டை, கீழப்பூங்குடி, காடனேரி உள்ளிட்ட 50 கிராமங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.

கடந்த ஒரு ஆண்டாக இங்கு உதவி மின்பொறியாளர், வணிகஆய்வாளர், வணிக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.விவசாய இணைப்புகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் மின் பழுதுகள் ஏற்படும் போது வயர்மேன் பணியிடமும் காலியாக உள்ளதால் சரிசெய்வதற்கு இரண்டு நாட்களாகின்றன வீடுகளில் பீஸ் ஏற்பட்டால் கூட ஆட்கள் பற்றாக்குறையினால் சரி செய்ய தாமதமாகிறது.

சிவகங்கை உதவிமின்பொறியாளர் கூடுதலாக கவனிப்பதால் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் மதகுபட்டிக்கு வருகிறார். மின் மீட்டர்கள் இடம்மாற்றம் செய்தல், கட்டண விகிதங்கள் மாற்றம், பெயர்மாற்றங்கள், மின்கட்டணத்தில் ஏற்படும் குளறுபடி போன்ற தினசரி வேலைகள் கூட ஒரு மாதத்திற்கு தாமதம் ஏற்படுகிறது. நீண்ட நாட்களாக காலியாக உள்ள பொறியாளர் மற்றும் பணியாளர்களை நியமிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


source : Dinamalar