Nagaratharonline.com
 
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்.  May 19, 12
 
காரைக்குடியில் பிரசித்தி பெற்ற கொப்புடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் செவ்வாய் பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

விழாவையொட்டி தினமும் இரவு அம்மன் வெள்ளி சிம்ம வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், வெள்ளி கேடகம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

8ம்திருநாளான கடந்த 15-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. .10ம் திருநாளான நேற்று முன்தினம் நள்ளிரவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக கொப்புடையநாயகி யம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 12.15 மணி அளவில் கொப்புடைய நாயகியம்மன் தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் அம்மன் எழுந்தருளினார்.