Nagaratharonline.com
 
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா  May 17, 12
 
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.மேஷராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குருப் பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

பின்னர் உற்சவர் கற்பகவிருஷத்துடன எழுந்தருளினார்.அதிகாலையிலிருந்து பக்தர்கள் திரளாக வந்து குரு பகவானை தரிசனம் செய்தனர். மாலை 6.18 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.