Nagaratharonline.com
 
காரைக்குடியில் சினிமா படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு  Apr 24, 12
 
காரைக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக 4 மணி நேரம் ஒரே இடத்தில் சினிமா படப்பிடிப்பு நடந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

மு. கணேசன் இயக்கத்தில் "இசக்கி' சினிமா படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. கதாநாயகன் சரண்.அறிமுக கதாநாயகியாக அர்ஷிதா நடித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக காரைக்குடி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் காரைக்குடி நகரில் நூறடி ரோடு, ஈ.வே.ரா., சிலையருகே காலை 8 மணி முதல் ஒரு மணி வரை ஒரே இடத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் செக்காலை ரோடு, நூறடி ரோட்டில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

source : Dinamalar