Nagaratharonline.com
 
கேஸ் சிலிண்டர் வந்த 3 நாளில் மறு சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்  Apr 20, 12
 
இந்திய ஆயில் கார்பரேஷன்(ஐ.ஓ.சி.) மேலாளர் எழிலரசன் கூறியது: ஒரு முறை சிலிண்டர் வந்த பிறகு 3-வது நாளில் மறு சிலிண்டருக்கு சமையல் எரிவாயு முகவர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ததற்கான அத்தாட்சியாக பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்த பிறகு 21 நாள்கள் கழித்து பதிவு செய்த நுகர்வோருக்கு சிலிண்டர் ஒதுக்கப்படும். இவ்வாறு ஒதுக்கப்படும் சிலிண்டர், பதிவு செய்த 32-வது நாளில் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும் என்று நடைமுறையில் உள்ளது.