Nagaratharonline.com
 
பொன் புதுப்பட்டி : பள்ளிப் புரவலர்களுக்கு பாராட்டு  Apr 20, 12
 
பொன்புதுப்பட்டி பள்ளிக்கு பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் ஆர்.எம். ராஜா சார்பில், 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான டிவிடி, ஆங்கில பேச்சுப் பயிற்சி சிடி, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் குடிநீர் சுத்திகரிப்புக் கருவி, பொன்புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கலிபோர்னியா ரோட்டரி சங்க நிதியுதவியுடன் இரண்டு கணினிகள், தேனிமலை எஸ்.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ஜெராக்ஸ் இயந்திரம் வங்க நிதியுதவி போன்ற நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

பள்ளிக்கு பல நலத் திட்ட உதவிகள் வழங்கிய புரவலர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.