Nagaratharonline.com
 
காரைக்குடியில் பாரம்பரியமாக கூடை முடையும் குடும்பத்தினர்  Apr 8, 12
 
காரைக்குடி அருகே குடிசை தொழிலாக கூடை பின்னும் தொழிலில் பல ஆண்டுகளாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்குடி அருகே ஓ. சிறுவயலில் ஒரே சமூகத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், பாரம்பரியமாக ஈச்சங்கூடை முடையும் தொழில் செய்து வருகின்றனர்.
விசேஷ காலங்களில் இதற்கு மவுசு அதிகரிக்கும்.
இக்கூடைகள் சுபநிகழ்ச்சிகளுக்கு சாதம் வடித்தல், நெல் சேகரிக்கும் கூடை, கோழி, கிளி, அழுக்கு துணி கூடைகள் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது, முகூர்த்த நேரமாக இருப்பதால், சாதம் வடிக்கும் கூடைக்கு மவுசு அதிகம்.
கூடை முடையும் தொழிலில் ஈடுபட்டுள்ள கன்னையா, 44. கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபடுகிறோம்.
முகூர்த்த காலங்களில் சாதம் வடிக்கும் கூடைகள் அதிகம் விற்கும். ஒரு நாளுக்கு 3 கூடைகள் மட்டுமே முடையமுடியும். ஒரு கூடையின் விலை அதன் வேலைப்பாட்டை பொருத்து, ரூ. 50 முதல் 200 வரை விற்கிறோம், என்றார்.

source : Dinamalar