Nagaratharonline.com
 
இரணியூரில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்  Apr 3, 12
 
திருப்பத்தூர், மார்ச் 29: - சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரணியூரில் ஏ.சி. முத்தையா சுகாதார நல மையத்தின் சார்பில் வியாழக்கிழமை இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இரணியூரில் நடைபெற்ற இம் முகாமுக்கு இச் சுகாதார நல மைய நிறுவனர் ஏ.சி. முத்தையா தலைமை வகித்தார். தேவகி முத்தையா முன்னிலை வகித்தார். திட்ட வளர்ச்சி அதிகாரி சிப்பிரியன் பால்ராஜ் வரவேற்புரையாற்றினார். இவ் விழிப்புணர்வு முகாமைத் துவக்கிவைத்துப் பேசிய ஏ.சி.முத்தையா கிராமங்களில் மருத்துவப் பணி செய்வது மிகவும் அரிது. நாங்கள் கிராம மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் இச் சுகாதார மையத்தை நிறுவி மக்கள் தங்கள் நோய் அறிந்து மருத்துவ முறைகளைப் பின்பற்ற வழி கோருகிறோம் என்றார். சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்றும், கிராமங்களில் கூட உணவுப் பழக்கவழக்கங்கள் மாறி வருவதைச் சுட்டிக்காட்டி அதை தடுக்க வேண்டும் என்று தேவகி முத்தையா பேசினார்.
டீம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சலீம் சர்க்கரை நோய் விழிப்புணர்வு உரையாற்றினார்.
யோகா நிபுணர் செல்வராஜ் யோகா பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கமளித்தார். இம் முகாமில் 47 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த்து தெரியவந்து, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதாரப் பணியாளர்கள் தேவிகா, குருந்தாயி, சசிகலா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிவில் டாக்டர் பெரியசாமி நன்றி கூறினார்.

Source:Dinamani