Nagaratharonline.com
 
வலையபட்டி மெய்யப்பா வள்ளியம்மை மெட்ரிக் பள்ளியின் 11-ம் ஆண்டு விழா  Mar 21, 12
 
வலையபட்டி மெய்யப்பா வள்ளியம்மை காஞ்சி சங்கர வித்யாலய மெட்ரிக் பள்ளியின் 11-ம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்து ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் கருப்பையா பேசுகையில், பள்ளி நிர்வாகம், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடைய கூட்டு முயற்சியால்தான் நல்ல சமுதாயம் என்ற மாளிகையை எழுப்ப முடியும் என்றார் அவர்.

பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் எம்.கே.கேஎம். சேதுராமன், துணைத் தலைவர் எஸ். சொக்கலிங்கம், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எம். ராஜமாணிக்கம், டி. மல்லிகா, பி.எல்.எம். முத்தையா, பி.எல். ராமநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.