Nagaratharonline.com
 
ஒரு காலத்தில் குடிநீர் தந்தது குப்பை தொட்டியான தேவன் ஊரணி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை  Dec 10, 09
 
அரிமளம்,: ஒரு காலத் தில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட திருமயம் அருகே உள்ள தேவன் ஊரணி தற்போது குப்பை தொட்டியாக மாறிவிட் டது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவ ட்டம் அரிமளம் எட்டாம் மண்டகப்படி அருகே தேவன் ஊரணி உள்ளது. இது 1902ல் ராயவரம் லட்சுமணன் செட்டியார் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. பின்னர் இந்த பகுதி மக்கள் ஊரணியில் அசுத்தம் செய்யாமல் இரு க்க காவல் போடப்பட்டு குடிநீர் ஊரணியாக பயன்படுத்தி வந்தனர். காலபோக்கில் மக்கள் குளிக்கும் ஊரணியாக மாறி போ னது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக ஊரணி கேட்பாரற்று கிடக்கிறது. தற்போது மக்கள் இந்த ஊரணியை குளிக்க கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் 1998ம் ஆண்டு அரிமளம் பேரூராட்சியில் ஊரணிக்கரையில் வணிக வளாகம் அமைக்கப்பட் டது. அப்போது தேவன் ஊரணிக்கு நீர் வரும் கால்வாயை மூடி கட்டடம் எழுப்பப்பட்டு விட்டது. இதனால் ஊரணிக்கு நீர்வரத்து தடைபட்டது.
மேலும் கடை கழிவுகள், மற்ற கழிவுகள், முற்புதற்களால் ஊரணி இருக்கும் இடமே தெரியாத அள விற்கு குப்பை தொட்டியாக மாறி விட்டது. தேவன் ஊரணி கரையில் எட்டாம் மண்டகப்படி பேருந்து நிறுத்தம் உள்ளது. பஸ்சுக் காக காத்திருக்கும் பயணி கள் தேவன் ஊரணியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கடந்த 2 ஆ ண்டுகளுக்கு முன் பொதுமக்கள் அனைவரும் சேர் ந்து ஊரணியை சுத்தம் செய்தனர். ஆனால் தற் போது ஊரணியை யாரும் கண்டுகொள்வதில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளுக்கு கழிப்பிட வசதியும், ஊரணியில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வே ண்டும். மேலும் ஊரணி யை சுத்தம் ªச்யது மீண் டும் குடிநீர் ஊரணியாக மாற்ற வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த சைக்கிள் கடை சரவணன், வெல்டிங் முருகராசு கூறினர். மேலும் கிராம மக்கள் இந்த ஊரணியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்

source : Dinakaran