Nagaratharonline.com
 
திருப்புத்தூர் - கல்லல் இடையே மணிமுத்தாற்றில் மேம்பாலம்  Mar 20, 12
 
திருப்புத்தூர் - கல்லல் இடையே மணிமுத்தாறில் மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். திருப்புத்தூர் முதல் கண்டரமாணிக்கம், பட்டமங்களம், சொக்கநாதபுரம், செம்பனூர் வழியாக 25 கி.மீ., தூரம் சென்று கல்லலை அடைய வேண்டும். இதனால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

மேம்பாலம்: இதற்கு மாற்றாக கண்டரமாணிக்கத்தில் இருந்து பொன்னாங்குடி, புரண்டி, கள்ளிப்பட்டு வழியே கல்லல் சென்றால், 16 கி.மீ., தூரமே ஆகிறது.

இங்கு, பொன்னங்குடி - கள்ளிப்பட்டி இடையே மணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டினால் தான் போக்குவரத்து எளிதாகும். வெள்ள சேதத்தின் போது இங்கு பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே, திருப்புத்தூர் மக்கள் கல்லல் ரயில்வே ஸ்டேஷன் சென்றுவர ஏதுவாக, மேம்பாலத்தை கட்டி முடிக்க அரசு முன்வரவேண்டும்.

source : Dinamalar