Nagaratharonline.com
 
2 வாங்கினால் 1 இலவசம்: கோ-ஆப்டெக்ஸ் புதிய திட்டம்  Mar 13, 12
 
கைத்தறித் துணிகள் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டத்தை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி, தனது 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தினத்தை வாடிக்கையாளர்களுடன் இணைந்து கொண்டாடும் விதமாக முதல் முறையாக கைத்தறித் துணிகள் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரூ.1999-க்கு கைத்தறித் துணிகள் வாங்கினால் 20 சதவீதம் தள்ளுபடியும், ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4,999 வரை துணிகள் வாங்கினால் 25 சதவீதம் தள்ளுபடியும், ரூ.5 ஆயிரத்துக்கு மேலாக துணிகள் வாங்கினால் 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும்.


இந்தச் சலுகைகள் வரும் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் வழங்கப்படும்.