Nagaratharonline.com
 
ரயில் முன்பதிவு காலம் 120 நாள்களாக அதிகரிப்பு  Mar 5, 12
 
விரைவு ரயில்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள் 90 நாள்களுக்கு முன்பு, அதாவது 3 மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இது தற்போது, 120 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில், வரும் 10.3.2012 முதல் இதை அமல்படுத்த இருப்பதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்யும் நாளை தவிர்த்து 120 நாள்கள் கணக்கிட்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம்.