Nagaratharonline.com
 
கோடையை சமாளிக்க சில எளிய வழிமுறைகள்:  Feb 23, 12
 
தனியாக தள வீடுகள் உள்ளவர்கள் கூரையில் தென்னை ஓலைகளை பரப்பி வைத்தால் வெப்பத்தில் இருந்து தப்பலாம்.

தள வீட்டில் வசிப்பவர்கள் முடிந்தளவு வீட்டிற்குள் மேற்புறத்தில் தெர்மோக்கோல் வைத்துக் கொள்ளலாம்.

மொட்டை மாடிக்கு கீழே வசிப்பவர்கள் மேல்தளத்தில், மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றவும். இதனால், இரவு தூங்கும் போது வீட்டிற்குள் சூடுவராமல் இருக்கும்.

ஜன்னல்களில் நார் அல்லது வெட்டிவேர் திரைகளை தொங்க விடுவது நல்லது. அவ்வப்போது அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் குளிர் காற்று இலவசமாக வீசும்.

கொஞ்சம் வசதி படைத்தவர்கள் இன்வெட்டரை பயன்படுத்தலாம். இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், மின்வெட்டு சமயத்திலும் உபயோகமாக இருக்கும்

மண் பானையில் குடிநீர் வைத்துக் கொள்வதால் குளிர்ந்த நீர் தாராளமாக கிடைக்கும்.