Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பையில் இலவச மருத்துவ முகாம்  Feb 15, 12
 
 
பொன்னமராவதி, பிப் 13: பொன்னமராவதி அருகேயுள்ள நெற்குப்பையில் இலவசப் பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம், நெற்குப்பை சோம.லெ. நினைவு கிளை நூலகம், வட அமெரிக்கா நகரத்தார் சங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துமனை ஆகியன இணைந்து இந்த முகாமை நடத்தின.
முகாமிற்கு ராயல் அரிமா சங்கத் தலைவர் டி. அரவிந்த்சேட் தலைமை வகித்தார். செயலர் எம். சந்திரன், பொருளாளர் பிஎல். மாணிக்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 342 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகளை வழங்கினர். முகாமில் சங்க நிர்வாகிகள் எஸ்கேஎஸ். பழனியப்பன், எஸ்பி. கனகு, மணிமுத்து, குமரப்பன், எஸ்எம்டி. திருநாவுக்கரசு, முல்லை தங்கராஜ், மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பொறியாளர் பழனியப்பன் செய்திருந்தார்.

Source:Dinamani