Nagaratharonline.com
 
மாநிலப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நகரத்தார் பள்ளி மாணவர்கள்  Feb 11, 12
 
தேவகோட்டை, பிப். 8: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 54-வது குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

19 வயதுக்குள்பட்ட பிரிவில் அஜய்குமார், இம்மானுவேல், சதீஷ், கார்த்திக் ஆகியோர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கம் வென்றனர். 17 வயதுக்கு உள்பட்டவர்கள் பிரிவில் ராஜேஷ்ககண்ணன், சதீஷ்குமார், பிரவீன்ராஜ், சகாயராஜ் ஆகியோர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கம் வென்று, மண்டலத்துக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்தனர்.

சாதனை புரிந்த மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் பூமிநாதனையும் செயலாளர் ராமநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத், மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன், தலைமையாசிரியர் முனைவர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய அலுவலர்கள் பாராட்டினர்.


Source:Dinamani