Nagaratharonline.com
 
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: வணிகவரி உதவி ஆணையர் கைது  Jan 31, 12
 
தனியார் நிறுவனம் தொடங்க அனுமதி வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சென்னை வணிகவரித் துறை உதவி ஆணையர் எம்.என். ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் தனுஷ்குமார் (41). இவர் தனியார் விளம்பர ஆலோசனை நிறுவனம் தொடங்க உள்ளார்.
இதற்காக வணிகவரித் துறையில் அனுமதியும், உரிமமும் பெற ஆயிரம் விளக்கில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் தனுஷ்குமார் விண்ணப்பித்தாராம்.

இது தொடர்பாக அத் துறை உதவி ஆணையர் எம்.என். ஜெயலட்சுமி (57), அவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் தனுஷ்குமார் புகார் செய்தார்.
புகாரின்பேரில் டி.எஸ்.பி. பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, அசோக், செல்லமுத்து ஆகியோர் தனுஷ்குமாரிடம் ரூ. 4 ஆயிரத்தை கொடுத்து, அதை ஜெயலட்சுமியிடம் லஞ்சமாக வழங்குமாறு கூறினர். அதன்படி ரூ.4 ஆயிரத்தை தனுஷ்குமார் திங்கள்கிழமை நண்பகல் வழங்கினாராம். அப்போது அங்கு மறைந்து நின்ற போலீஸôர் ஜெயலட்சுமியை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

source : Dinamani