Nagaratharonline.com
 
மதுரை - பொன்னமராவதி இடையே உலகம்பட்டி வழியாக பஸ் வசதி தேவை  Jan 24, 12
 
எஸ்.புதூர் வழியாக மதுரை - பொன்னமராவதி இடையே பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம்,மேல்நிலைப்பள்ளி,உலகம்பட்டி மேல்நிலைப்பள்ளி, எஸ்., புதூர் ஊராட்சி ஒன்றியம், கல்வி அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி,வங்கிகள் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்குகின்றன. இங்கு தங்க போதிய வீடுகளின்றி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மதுரையில் இருந்து வந்து செல்கின்றனர். இங்கு, போதிய பஸ் வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதை தவிர்க்க மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து பொன்னமராவதிக்கு, புழுதிபட்டி,செட்டிகுறிச்சி, எஸ்.,புதூர், உலகம்பட்டி வழியாக இயக்க வேண்டும்.


source ; Dinamalar