Nagaratharonline.com
 
திருப்புத்தூர் பெருமாள் கோயில் ஜன.26ல் யாகசாலை துவக்கம்  Jan 23, 12
 
திருப்புத்தூர் நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.26ல் யாகசாலை பூஜை நடக்கிறது. திருப்புத்தூரில் கி.பி.,9ம் நூற்றாண்டிலிருந்தே ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயில் புகழ் பெற்றுள்ளது.நின்றார்,இருந்தார்,கிடந்தார் என்ற மூன்று நிலைகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அர்ச்சா மூர்த்தியாக அருள்பாலித்து வந்தார்.

விசாலயத் தேவர் மன்னர் காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு உற்சவம் நடந்துள்ளது. 1928,1961 ம் ஆண்டுகளில் இக்கோயிலில் திருப்பணிகள் நடந்துள்ளன. தற்போது மீண்டும் வரும் 30ம்தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இம்முறை தனிக்கோயிலாக தாயார்,ஆண்டாள்,சக்கரத்தாழ்வார் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பஞ்சவர்ணத்திலான ராஜகோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.26ம் தேதி மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது.தொடர்ந்து ஜன 27,28,29 ஆகிய நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் யாகசாலை வழிபாடு தொடர்கிறது. ஜன.30ம்தேதி காலை 10.10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.


source : Dinamalar