Nagaratharonline.com
 
பல்லாவரம் : பாதாள சாக்கடை இணைப்பிற்கு விண்ணப்பம்  Jan 23, 12
 
பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்பிற்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.

பல்லாவரம் நகராட்சியில் 75 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல், இத்திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்நிலையில், வீட்டு இணைப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இணைப்பு பெறுவதற்காக வீட்டிற்கு 10 ஆயிரம் ரூபாய், வர்த்தக நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.


source : Dinamalar