Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி RM.மெய்யப்பச்செட்டியார் மெட்ரிக் பள்ளி : பொங்கல் விழா  Jan 14, 12
 
கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச்செட்டியார் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விழாவுக்கு பிள்ளையார்பட்டி சிவநெறிக் கழகத் தலைவர் டாக்டர் பிச்சைக் குருக்கள் தலைமை வகித்தார். திருப்பத்தூர் பங்குத் தந்தை தாமரைச்செல்வன் ஆரோக்கியசாமி, சின்ன பள்ளிவாசல் ஹாலிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவைத் தொடர்ந்து, பள்ளியின் முன்பாக ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர்.