Nagaratharonline.com
 
பாராக மாறிவரும் மானாமதுரை புதிய பஸ் நிலையம்  Dec 1, 09
 
மானாமதுரை: மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் பார் வசதியில்லாததால் குடிமகன்களின் புகலிடமாக புதிய பஸ் நிலையம் மாறி வருகிறது.
மானாமதுரை நகரில் 6 அரசு மதுபானக்கடை கள் செயல்பட்டு வருகின் றன. இதில் 5 கடைகளில் பார் வசதி உள்ளதால் குடிமகன்களுக்கு பிரச் சனை இல்லை.
ஆனால் முக்கியமான கடையான புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள அரசு மதுபானக்கடையில் பார் வசதியில்லாததால் குடிமகன்கள் சரக்குகளை வாங்கி கொண்டு புதிய பஸ் நிலையத்தின் உட்புறம் சென்று குடித்து வருகின்ற னர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மது பிரியர்களுக்கு பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஒரு சிலர் சைடு டிஷ்கள் சப்ளை செய்வ தால் அவர்களின் ஆதரவுடன் ஏராளமானோர் மது அருந்திவிட்டு பயணிகளுடன் தகராறு செய்கின்றனர். புதிய பஸ் நிலை யம் அருகே 4 கல்யாண மகால்கள் உள்ளன.
விசேஷ நாட்களில் கூடுதலாக குடிமகன்கள் வருகை தருவதால் புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான தகராறுகள் நிகழ்கின்றன. மோதல் குறி த்து போலீசாருக்கு தகவல் கிடைத்து வருவதற்குள் தகராறு செய்பவர்கள் தப் பியோடி விடுகின்றனர்.
இதுகுறித்து சுரேஷ் என்பவர் கூறுகையில், “பஸ் நிலையம் அருகே மதுபானக்கடையில் ஏற் கனவே பார் செயல்பட்டு வந்தது. கடை உரிமையா ளர் பாரை காலி செய்ய சொல்லி விட்டதால் வேறு இடம் கிடைக்காமல் பார் செயல்படுவது நின்று விட்டது.
இதனால் எங்களை போன்ற குடிமகன்கள் வேறு இடம் கிடைக்காமல் பேருந்து நிலையத்தின் உட்புறம் சென்று குடிக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பார் வசதி செய்து தரவேண்டும்Ó என்றார்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக பார் வசதி செய்து தரவேண்டும். இல்லையென்றால் மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதே குடிமகன்களின் கோரிக்கையாகும்.


Source: Dinakaran 01/12/09