Nagaratharonline.com
 
செல்போனில் SMS அனுப்ப அதிக கட்டணம்: செல்போன் நிறுவனங்களுக்கு நோட்டீசு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு  Jan 6, 12
 
காரைக்குடியை சேர்ந்த வக்கீல் அருணாச்சலம் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாட்களில் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதற்கு பி.எஸ்.என்.எல். மற்றும் 9 தனியார் செல்போன் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கிறது. எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் இந்த நிறுவனங்களுக்கு புகார் மனு அனுப்பி இருந்தேன்.

மேலும் டிராய் நிறுவனத்துக்கும் மனு செய்திருந்தேன். எனவே செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு அதிக கட்டணம் வசூப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜேஸ்வரன், விமலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டிராய் நிறுவனம், பி.எஸ்.என்.எல். கம்பெனி மற்றும் 9 தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

source : maalaimalar