Nagaratharonline.com
 
சென்னை : பிளாஸ்டிக் சாலை பணி இன்று துவக்கம்  Jan 3, 12
 
சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் தார் சாலை போடும் பணி புதன்கிழமை தொடங்குகிறது.


சென்னை நகரில் அண்மையில் பெய்த மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளை நீண்டநாள்கள் உறுதியாக உழைக்கக் கூடிய வகையில் பிளாஸ்டிக் தார்சாலையாக அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி முதல் கட்டமாக தியாகராய நகரில் உள்ள லட்சுமணன் தெருவில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்குகிறது.
இந்தத் தெருவில் 7 அடி அகலத்துக்கு 200 மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை நகரில் ரூ. 50 கோடி மதிப்பில் 118 பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள் பிளாஸ்டிக் தார் சாலைகளாக அமைக்கப்பட உள்ளன. மேலும் உள்புற சாலைகள் உள்பட 1,400 சாலைகள் பிளாஸ்டிக் தார் சாலைகளாக அமைக்கப்பட உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.111 கோடி என்று கூறப்படுகிறது.


90 சதவீதம் தாருடன் 10 சதவீதம் பிளாஸ்டிக் கலந்து இந்தச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. 7 ஆண்டுகள்வரை இந்தச் சாலைகள் சேதமடையாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


source : Dinamani