Nagaratharonline.com
 
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா  Dec 30, 11
 
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.சிதம்பரம் நடராஜர் கோவில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி, 8ம் தேதி நடக்கிறது. இதற்கான கொடியேற்று விழா நேற்று நடந்தது.

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கடும் மழை, புயலையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர். தேர் திருவிழா, ஜன., 7ம் தேதி நடக்கிறது. மறுநாள், 8ம் தேதி அதிகாலை, நடராஜர் உடனுறை சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஆயிரங்கால் மண்டப முகப்பில், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பகல், 12 மணிக்கு மேல், பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.