Nagaratharonline.com
 
ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும்போது பெயர், முகவரி பிழை திருத்தம் செய்யலாம்  Dec 30, 11
 
ஏற்கெனவே உள்ள ரேஷன் கார்டுகளையே 1.1.2012 முதல் 31.12.2012 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டின் உள்தாளின் மேற்பகுதியில் 2012 என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளைப் புதுப்பிக்கும்போது, அதில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் மாற்றம், குடும்ப உறுப்பினரை சேர்த்தல், நீக்கம், எரிவாயு சிலிண்டர் விவரம் ஆகிய விவரங்களை வாய்மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் ரேஷன் கார்டு தகவல் தொகுப்பு மேம்படுத்தப்படும். பின்னர் அந்த விவரங்களை தல விசாரணை செய்து ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி 2012 ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ளது. எனவே குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்கு செல்லும்போது, பணியாளரிடம் மேற்கண்ட விவரங்களை வாய் மொழியாகத் தெரிவிக்கலாம்.

source : dinamani