Nagaratharonline.com
 
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு : காரைக்குடியில் 1300 பேர் கைது  Dec 26, 11
 
காரைக்குடி : காரைக்குடி வந்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 1304 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் அருகே கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க., மாநில துணை பொது செயலாளர்கள் மல்லைசத்யா, துரைபாஸ்கரன், மாவட்ட செயலாளர்கள் செவ்வந்தியப்பன், பூமிநாதன், ஜெயராமன், செல்வராகவன், சந்திரசேகரன், உதயக்குமார், நகர செயலாளர் பசும்பொன்மனோகரன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உட்பட 337 பேர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரிவு செயலாளர் வெங்களூர் வீரப்பன், நகர செயலாளர் ருக்மாசரவணன் உட்பட 207 பேர், போலீஸ் செகன்ட் பீட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ., எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில் 435 பேர் கைது செய்யப்பட்டனர். புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹீருல்லா தலைமையில் 300 பேரும், நாம் தமிழர் இயக்கம் சார்பில் 25 பேர் உட்பட மொத்தம் 1304 பேர் கைதாகி, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Source:Dinamalar