Nagaratharonline.com
 
காரைக்குடி அ.மு.மு.. முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையம் பசுமை மரங்கள் வளர்க்கும் திட்டம் தொடக  Dec 20, 11
 
காரைக்குடி அமுமு. முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையம், முருகப்பா குழுமத்தின் மூலம் அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை வட்டங்களைச் சேர்ந்த 40 கிராமங்களில் 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பசுமை மரங்களை வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் கிராம மக்களின் மூலம் தெரு ஓரங்கள், குளக்கரைகள், கல்லூரி, பள்ளி வளாகங்கள், கோயில்கள், பயிர் செய்யப்படாத அனைத்து இடங்களிலும் மரங்களை வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முருகப்பா குழுமத் தலைவர் அ. வெள்ளையன் கூறியது:
மரங்களை வளர்த்தால் கார்பனின் அளவு குறையும், மேலும், நல்ல சுற்றுப்புறச் சூழல், தூய குடிநீர், காற்று கிடைக்கும். மரங்களுக்கிடையே ஊடுபயிர் வளர்ப்பதன் மூலம் வருமானமும் கிடைக்கும் என்றார் அவர்.