Nagaratharonline.com
 
பிரதமர் மன்மோகன் வருகை : காரைக்குடி வீடுகளில் சோதனை  Dec 18, 11
 
காரைக்குடிக்கு டிச., 26 அன்று பிரதமர் வருகையை முன்னிட்டு, அழகப்பா பல்கலை வளாகத்தில் உள்ள வீடுகளில் போலீசார் முழு விபரங்கள் சேகரித்து வருகின்றனர். பிரதமர் மன்மோகன், டிச., 26 அன்று பிற்பகல் 3 மணிக்கு அழகப்பா பல்கலை ராமானுஜர் கணித மையம், மானகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை திறக்க வருகிறார்.

பிரதமர் "ஹெலிபேட்' தளத்தில் இருந்து கார் மூலம் பல்கலை., மற்றும் மானகிரிக்கு வந்து செல்கிறார். இதனால், வழித்தடத்தில் உள்ள முக்கிய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். பல்கலை., வளாகத்தில் வசிப்பவர்கள் வீடுகள், கடைகளில் உள்ளவர்கள் குறித்து முழு விபரம் சேகரிக்கின்றனர். ஹெலிபேட் தளத்தில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.