Nagaratharonline.com
 
ஐ.ஐ.டி சேர்க்கைக்கான இலவச மாதிரி நுழைவுத் தேர்வு  Dec 14, 11
 
இந்தியாவில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு நுழைவு தேர்வு முக்கிய பங்கு வகிக்கின்றது. நுழைவுத் தேர்வு மூலம்தான் ஒவ்வொரு வருடமும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஜே.இ.இ., ஏ.ஐ.இ.இ.இ.,மற்றும் ஐ.ஐ.பி.எம்.டி என பல கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதனைக் கருத்தில்கொண்டு ரீச் அகாடமி மாணவர்களுக்காக இலவச மாதிரி நுழைவுத் தேர்வை நடத்துகிறது. மாதிரி நுழைவு தேர்வு ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் 25-ம் தேதி நடக்கிறது. நுழைவு தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையிலும், நேர மேலாண்மையைத் தெரிந்து கொள்ளவும் இந்த மாதிரி நுழைவு தேர்வு மாணவர்களுக்கு உதவும். சென்னையில் அடையாறு, அண்ணா நகர், அசோக் நகர், ஆவடி, பெரம்பூர், தாம்பரம், நங்கநல்லூர் ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெறும்.
இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், டிசம்பர் 24-ம் தேதிக்குள் தொலைபேசி மூலமோ, நேரிலோ பதிவு செய்து கொள்ளலாம்.
முகவரி: ரீச் அகாடமி, எண். 5, ஆர். 40-ஏ, டிஎன்எச்பி காம்பளக்ஸ், முகப்பேர், சென்னை,- 600 037. தொலைபேசி எண்: 044-43550505,044-26255555, 044-43313381. இமெயில்: info@reachacademy.net