Nagaratharonline.com
 
கண்​ட​னூ​ரில் மூதாட்​டி​யி​டம் நகைப்​பெட்டி கொள்ளை  Nov 26, 09
 
சிவ​கங்கை மாவட்​டம்,​ காரைக்​குடி அருகே கண்​ட​னூ​ரில் வீட்​டில் தனி​யாக இருந்த மூதாட்​டி​யைக் கட்​டிப்​போட்​டு​விட்டு நகைப்​பெட்​டியை கொள்​ளை​ய​டித்​துச்​சென்​ற​வர்​களை போலீ​ஸôர் தேடி​வ​ரு​கின்​ற​னர்.

​ ​ கண்​ட​னூர் பெரு​மாள்​கோ​யில் தெரு​வைச்​சேர்ந்​த​வர் அடக்​கம்மை ஆச்சி ​(85). இவர் மட்​டும் தனி​யாக வசித்து வரு​கி​றார். இவ​ரது மகன்​கள் கோவை​யில் வசித்​து​வ​ரு​கின்​ற​னர்.

​ ​ அடக்​கம்மை ஆச்​சிக்கு சமை​யல் செய்​து​கொ​டுத்​து​விட்டு இரவு துணை​யாக காந்தி என்ற பெண் வேலை செய்​து​வ​ரு​கி​றார். காந்தி வழக்​கம்​போல் செவ்​வாய்க்​கி​ழமை காலை​யில் உணவு சமைத்​து​விட்டு அவ​ரது வீட்​டுக்​குத்​தி​ரும்பி விட்​டார். ​

​ ​ மீண்​டும் இரவு அடக்​கம்மை ஆச்சி வீட்​டுக்கு தூங்​கு​வ​தற்​காக வந்​த​போது மூதாட்​டியை யாரோ வாயில் துணி​யால் கட்​டி​யும்,​ அவரை கை,​கால்​களை கட்​டிப் போட்​டி​ருந்​த​தைப்​பார்த்து காந்தி அதிர்ச்​சி​ய​டைந்​தார்.​ ​ பின்​னர் மூதாட்​டி​யின் தம்​பிக்கு தக​வல் தெரி​விக்​கப்​பட்​டது. மூதாட்​டி​யைக்​கட்​டிப்​போட்​ட​வர்​கள் பீரோ​வில் வைத்​தி​ருந்த பெட்​டியை திரு​டிச்​சென்​றி​ருப்​ப​தாக அடக்​கம்மை ஆச்சி தெரி​வித்​துள்​ளார். ​​ பெட்​டி​யில் உள்ள நகை​கள் விவ​ரம் கோவையி​லி​ருந்து மகன் வந்த பிறகே தெரி​ய​வ​ரும் என்று கூறப்​ப​டு​கி​றது.

​ ​ இது​கு​றித்து ​பு​கா​ரின் பேரில் வழக்​குப்​ப​திவு செய்து போலீ​ஸôர் விசா​ரணை நடத்தி வரு​கின்​ற​னர்.

source : Dinamani 27/11/09