Nagaratharonline.com
 
NEWS REPORT: நாற்பது வயதுக்காரர்களை துரத்தும் `வெள்ளெழுத்து'!  Nov 14, 11
 
நாற்பது வயது நடுத்தர வயது தானே. அப்போதே பார்வையில் பிரச்சினை வந்து விடுமா?' என்ற எண்ணம் பலருக்கும் வரும்.வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
வெள்ளெழுத்து என்கிற இந்தப் பிரச்சினையை கிரேக்க மொழியில் `ப்ரெஸ்பயோப்பியா' என்று சொல்வதுண்டு. ப்ரெஸ்பயோ என்றால் வயதானவர். ஓபியா என்றால் கண்கள்.

அதாவது "வயதான கண்கள்'' என்று நாற்பது வயதை தாண்டியவர்களின் கண்களைச் சொல்வார்களாம். நாற்பது வயதுக்கு மேல் சுமார் நாற்பது செ.மீ தூரத்தில் நியூஸ் பேப்பரை வைத்து படிக்க முடியவில்லை என்றால் இதை வெள்ளெழுத்துப் பிரச்சினை அதாவது `சாளேஸ்வரம்' என்று சொல்வதுண்டு.

புத்தகம் படிப்பதற்கு கஷ்டம், புத்தகத்திலுள்ள சின்ன எழுத்துக்களைப் படிப்பதற்குக் கஷ்டம், சற்று குறைவான வெளிச்சத்தில் படிப்பதற்கு கஷ்டம், கம்ப்யூட்டரில் எழுத்துக்களைப் பார்ப்பதற்கு கஷ்டம், செல்போனில் நம்பரை பார்ப்பதற்கு கஷ்டம், கொஞ்ச நேரம் படித்தாலே நிறைய நேரம் படித்தது போன்ற ஒரு நினைப்பு. கண்களில் ஓர் அசதி, களைப்பு, எரிச்சல்...

கண்ணில் கருவிழிக்கு உள்ளே இயற்கையாக உள்ள லென்ஸ், கொஞ்சம் கொஞ்சமாக கடினமாவதாலும், வீங்கி விடுவதாலும் லென்சின் மடங்கி விரியும் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடுவதாலும் தான், இந்த வெள்ளெழுத்துப் பிரச்சினை உண்டாகிறது. லென்சுக்குள் இருக்கும் புரோட்டீனில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் புரோட்டின் சிதைந்து லென்ஸ் கடினமாகி விடுகிறது.

லென்ஸைச் சுற்றியுள்ள மிக மெல்லிய மிக நுண்ணிய தசைநார்களில் இறுக்கம் ஏற்பட்டு எலாஸ்டிக் தன்மை குறைந்து கிட்டத்தில் இருக்கும் பொருளை, சரியாக போக்கஸ் பண்ண முடியாமல் போய்விடுகிறது. வயது கூடக்கூட கண்களிலுள்ள லென்சின் போக்கஸ் செய்யும் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த நேரத்தில் கண் டாக்டரை சந்தித்து கண்களை டெஸ்ட் பண்ணி, கண்ணாடி போட்டுக் கொள்வதற்குப் பதிலாக அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் கூட, நாற்பது வயதைத் தாண்டும்போது கண் பார்வையில் வித்தியாசம் அல்லது தடுமாற்றம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் கண்களை டெஸ்ட் பண்ணி உடனே கண்ணாடி போட்டுக்கொள்வது நல்லது. அதாவது கண்களுக்கு நல்லது.

source ; maalaimalar