Nagaratharonline.com
 
ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ. 2,000 அபராதம் : விரைவில் அமலாகிறது  Nov 14, 11
 
மாநில போக்குவரத்து திட்டப்பிரிவு ஐ.ஜி., ராஜேந்திரன் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை அமைத்த பிறகு, கடந்த 1994ம் ஆண்டு முதல் பேட்ரோல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் "ஹெல்மெட்' அணியாமல் சென்றால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதற்கு, அந்த மாநிலத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் தமிழகத்திலும், விபத்துக்களை குறைக்கும் வகையில், இந்த அபராதத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. காவல்துறையினர், "ஹெல்மெட்' அணியாமல் வந்தாலும், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

மணிப்பாலில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட அரசு வாகனங்களுக்கு, அபராதம் விதித்த வகையில், 2 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதே முறை இங்கும் பின்பற்றப்பட வேண்டும். தமிழகத்தில் நான்கு நிமிடத்திற்கு ஒரு விபத்தும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க, இது போன்ற விதிமுறைகள் தேவையாய் உள்ளன.இவ்வாறு ஐ.ஜி.,ராஜேந்திரன் தெரிவித்தார்.

source { Dinamalar