Nagaratharonline.com
 
அரிமளத்தில் ஜெயவிளங்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்  Nov 10, 11
 
அரிமளத்தில் நடந்த ஜெயவிளங்கி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

அரிமளம் ஜெயவிளங்கி அம்மன் கோவில் பல லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு, ஜெயவிளங்கி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையட்டி முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜை, பூர்ணாஹதி, தீபாராதனை நடைபெற்றது.