Nagaratharonline.com
 
வயிரவர் கோயிலில் சம்பக சஷ்டி சூரசம்ஹாரம்  Nov 24, 09
 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள என்.வைரவன்பட்டி வயிரவர் கோயிலில் சம்பக சஷ்டி விழா சூரசம்ஹாரத்துடன் நிறைவடைந்தது.

கடந்த நவம்பர் 17-ம் தேதி முதல் சம்பக சஷ்டி விழா துவங்கியது. காலையில் வயிரவருக்கு ஹோமமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. மாலையில் வயிரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழா நிறைவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் மண்டகப்படி தீபாராதனைகள் நடந்தன.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. இரவு மகிசாசுரனை புரட்டாசி மாதம் அம்பாள் வதம் செய்கிறாள். ஐப்பசியில் முருகன் சூரனை வதம் செய்கிறார். தொடர்ச்சியாக கார்த்திகை மாதம் பூரணமாக வயிரவர் சம்பகாசுரனை வதம் செய்கிறார்.

இந் நிகழ்ச்சிப்படி வயிரவன்பட்டியில் வயிரவர் சூரசம்ஹாரம் செய்தார்.

இந் நிகழ்ச்சியில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத் தலைவர் சிதம்பரம், செயலாளர் வெங்கடாசலம், இணைச் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.

source : Dinamani 25/11/09